கருப்பட்டியின் பலன்கள்
மருத்துவ குணங்களில் கருப்பட்டி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மருத்துவ குணங்கள் ஏராளம். கருப்பட்டி இனிப்பு சுவையோடு நமது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. இதில் இரும்பு மற்றும் கால்சியம் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. வைட்டமின் B மற்றும் அமினோ அமிலங்கள் இருப்பதால் நிரிழிவு நோயை கட்டுபடுத்துகிறது. கருப்பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சி அடைய செய்யும். அதில் உள்ள “கிளைசிமி இன்டெக்ஸ்“ உடலில் கலக்கும் சக்கரை அளவை வெள்ளை சக்கரையை விட பாதிக்கும் கீழாக குறைகிறது.
பழந்தமிழர் வாழ்வில் முக்கிய பங்கு வகித்த கருப்பட்டி சமூக வலைத்தளங்கள் மூலம் அதிகம் அறியப்பட்டு சமீப காலங்களாக இதன் நுகர்வு மற்றும் பயன்பாடு அதிகரித்துள்ளது.
கருப்பட்டி மற்றும் வெல்லம்
கருப்பட்டி | வெல்லம் |
1. பனை மரங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. | 1. கரும்புகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. |
2. வைட்டமின் Bமற்றும் இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது. | 2. மக்னேசயும் அதிகம் நிறைந்துள்ளது. |
3. உடலை குளிர்ச்சி அடைய செய்யும். | 3. உடலை திடபடுத்தும் |
4. அனிமியா நோயிலிருந்து பாதுகாக்கும். | 4. இரத்த சோகை வராமல் தடுக்கும். |