மன்னார்குடியிலிருந்து மதுரைக்கு ஓர் இனிப்பின் பயணம்!

 

10 நாட்களுக்கு முன் நமக்கு நன்கு அறிமுகமான மதுரை நிறுவனத்தின் மேலாளரிடமிருந்து ஓர் தொலைபேசி அழைப்பு.

அந்நிறுவனத்தின் பங்குதாரரின் மகளுக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் அதற்க்கு தங்களது தயாரிப்புகள் பயன்படுத்தலாம் என அவர் நினைப்பதாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே நமது பொருட்களை அவரது நிறுவன ஊழியர்களுக்கு, வாடிக்கையாளர்களுக்கு வாங்கியவகையில் அவருக்கும் நமது நிறுவனத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்யவேண்டும் என நினைக்கக்கூடியவர். தரமான பொருட்களையே மக்களுக்கு வழங்கவேண்டும் என நினைப்பவர். மகிழ்வுடன் அவரை தொடர்பு கொண்டோம்.

அவரை பொறுத்தவரை கொடுக்க வேண்டுமேயென்று நினைத்து விட்டார். ஆனால் என்ன கொடுப்பது? எவ்வளவு கொடுப்பது என்கிற திட்டம் இல்லை. திட்டமிடலுக்கு எங்களை அழைத்தார்.

திருமணத்திற்கு 2000 தாம்பூல பைக்குள் நமது இனிப்பு இருக்க வேண்டும் என்கிற கோணத்தில் என்ன வைக்கலாம் என்ற கலந்தாய்வு செய்தோம்.

கடலை மிட்டாய், பொட்டுக்கடலை மிட்டாய், முந்திரி மிட்டாய், பொரி உருண்டை, நைஸ் கடலை மிட்டாய் இவற்றில் எதை வழங்கலாம் என யோசித்தோம்.

அவரது வீட்டில் கடைசி திருமணமாக இருப்பதால் கடலை மிட்டாய் போடலாம். தமிழ்நாட்டில் வீட்டின் கடைசி திருமணத்திற்கு கடலை மிட்டாய் (சாப்பாடு இலையிலோ, தாம்பூல பையிலோ) வழங்குவது பழக்கமாக உள்ளது.

என் கடைசி மகளுக்கு திருமணமாக இருந்தாலும், எனது தம்பிக்கு மகன்கள் இருவர் உள்ளனர். ஆகவே அது வேண்டாம் என தவிர்த்து விட்டார். அவரது அந்த எண்ணம் மனதுக்கு நிறைவாக இருந்ததால் முந்திரி & பொரி உருண்டை பக்கம் வந்து விட்டோம்.

மேற்கூறிய 2ல் பொரி உருண்டை சிறப்பானதாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருந்ததால் அதையே தேர்வு செய்தோம்.

அப்படியே இந்திய ஒன்றியம் முழுவதும் இருந்து திருமணத்துக்கு வர இருக்கும் அவர்களது 200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு…

  • முந்திரி மிட்டாய் (1 பாக்கெட்)
  • மசாலா பொரி (1 பாக்கெட்)
  • பொரி உருண்டை (1 பாக்கெட்)
  • நேந்திரம் சிப்ஸ் (1 பாக்கெட்)
  • குடிநீர் குடுவை

அடங்கிய Welcome Kid ஒன்றை, முதல் நாள் தங்கும் விடுதியின் ஒவ்வொரு அறையிலும்  வைக்கலாம் என்கிற யோசனையையும் அவரே தெரிவித்தார்.

அதுவும் நல்ல முயற்சி, நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து இரவு தங்கும் விருந்தினர்களுக்கு, நொறுக்கு தீனியாக தமிழ்நாட்டின் சுவையை தெரிவிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று தோன்றியது. சுமார் 2000 பேருக்கு நமது பொருட்களை கொண்டு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அவருக்கு நன்றி கூறி நிகழ்ச்சிக்கு குறைவான நாட்களே இருந்ததால் தயாரிப்பில் கவனம் செலுத்த தொடங்கினோம்.

நமது குழுவுடன் எப்படி தயார் செய்வது எப்படி packing செய்வது என்று கலந்து பேசி வேலையை உடனடியாக துவக்கினோம். ஏற்கனவே உள்ள வியாபாரத்திற்கு நடுவில் இவற்றையும் நமது ஊழியர்களின் சிறப்பான செயல்பாட்டினால், நல்லமுறையில் தயாரித்து சரியான நேரத்தில் அனுப்பினோம்.

இத்திருமணத்திற்க்கு நமது பொருட்களை வாங்கி செய்து, நல்லமுறையில் அனைவருக்கும் வழங்க செய்த யுவராஜ் பயர் ஒர்க்ஸ் நிறுவனத்திற்கு எங்கள் சிங்கம் சார்பாக நன்றிகளை தெரிவித்து மணமக்களை வாழ்த்தி விடை பெற்றோம்.

இது போன்று சவாலான தேவைகளை நிறைவேற்றுவதில் நாங்கள் என்றுமே தயாராக இருப்போம்.

தங்கள் இல்ல விழாக்களுக்கான தேவைகளுக்கு எங்களை தொடர்பு கொள்ள:
தொலைபேசி எண்: +91 9245299910
மின்னஞ்சல்: sales@singamsweets.com
இணைய கடை: www.singamsweets.com


 

* “விருந்தினர்கள் அனைவருக்கும் நமது தயாரிப்புகள் மிகவும் பிடித்திருந்தது, வெல்லத்தில் செய்யப்பட்ட முந்திரி மிட்டாயை ருசித்து சாப்பிட்டார்கள்”.

திரு. V. ராஜா சந்திரசேகரன்,
யுவராஜ் பட்டாசு உரிமையாளர்,
மதுரை.


மசாலா பொரி அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. அதிக காரம் இல்லாமல் தூய தேங்காய் எண்ணெய் மணத்துடன் வறுத்த நிலக்கடலை சேர்க்கப்பட்ட சுவை அனைத்து வயதினரும் விரும்பி உண்டார்கள்”.

திரு. V. ராம சுந்தரசேகரன், MBA,
யுவராஜ் பட்டாசு உரிமையாளர்,
மதுரை.


என் மகன்   பொரி உருண்டையை எனக்கு மிச்சம் வைக்காமல்   1 பாக்கெட முழுவதையும் சாப்பிட்டு விட்டார்”

திரு. P. சந்திரன்,
யுவராஜ் பட்டாசு மேலாளர்,
மதுரை.