Sweet Pillaiyar in Malaysia and Valliyur
மலேசியா மற்றும் நாகர்கோவில் வள்ளியூரில் மன்னார்குடி சிங்கத்தின் இனிப்பு பிள்ளையார்
பலவிதமானபண்டிகைகளால்நமதுதமிழநாடு தனித்துவத்துடன் திகழ்கிறது .
இல்ல விழாக்களை சிறப்பிக்க தட்டு வரிசை எனும் சம்பிரதாயம் முக்கிய இடத்தை பிடிக்கிறது
நிகழ்ச்சியின்போது கடவுளுக்கு படைத்திட பழங்கள் இனிப்புகள் பல்வேறு வடிவங்கள், சுவைகளில் கண்ணுக்கு பார்வையாக வைத்திடுவது வழக்கம்
பொதுவாக மஞ்சளை கூம்பு வடிவத்தில் பிடித்து தட்டில் வைத்து வழிபடுவது நமது மரபு
அதை சிறப்பிக்கும் வகையில் நமது சிங்கம் கூம்பு வடிவ கடலை மிட்டாய் இனிப்பு பிள்ளையார் என்கிற பெயரில் தயார் செய்து 2020 ம் வருடம் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வர
ப்பட்டது.
ஆரம்பத்தில் விநாயர் சதுர்த்தியை கணக்கில் கொண்டு கொண்டுவரப்பட்ட இந்த வடிவமைப்பு மக்களுக்கு பிடித்துப்போக பல்வேறு விழாக்களுக்கு பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்
திருமண தட்டுவரிசைகளில் மெல்ல இடம்பிடிக்க ஆரம்பித்த இனிப்பு பிள்ளையார் ,வளைகாப்பு, பெயர் வைத்தல், காது குத்து, சடங்கு ,கோவில் வழிபாடுகளுக்கும் பயன்படுத்த துவங்கினர்.
மலேசியா
ஒரு வாடிக்கையாளர் அவர் வீட்டு நிகழ்ச்சியில் ஒரு இடம் பிடித்த இனிப்பு பிள்ளையாரை whats app மூலம் பகிர அதை பார்த்த அவரது மலேசிய உறவினர் எங்களை தொடர்பு கொண்டு அவர்களது இல்ல நிகழ்ச்சிக்கு 1000 இனிப்பு பிள்ளையார்
Order கொடுத்தார் .
(பொருளுக்கு ஆகும் செலவுக்கு சமமாக தபால் நிலையம் மூலம் அனுப்பும் செலவு வந்ததால் நாங்கள் அனுப்ப மறுக்க அவசியம் நமது இனிப்பு பிள்ளையார் தேவை “எங்கள் இல்ல விருந்தினர்களுக்கு கொடுத்தே ஆக வேண்டும் ” என்று வற்புறுத்தியதால் அவரது வேண்டுகோளை ஏற்று பாதுகாப்பாக பேக் செய்து விமானம் மூலம் அனுப்பி வைத்தோம் .
அவர்கள் நினைத்தது போலவே அந்த பொருட்களுக்கு
அங்கு மிகுந்த வரவேற்பு இருந்தது என்பதை குறித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்கள்.
அடுத்த மாதம் அவர்கள் உறவினரின் சுப நிகழ்ச்சிக்கும் இதுவும் வேறு சில பொருட்களும் தேவைப்படும் என்பதாகவும் அதற்கும் இது போன்று சிறப்பாக செய்து தர கட்டளையிட்டார்கள் .
அவசியம் சிறப்பாகவே செய்து தருவோம் என வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறினோம்
வள்ளியூர்
இனிப்பு பிள்ளையாரை தமிழ்நாட்டின் தென் கோடிக்கு கொண்டு சேர்த்த பெருமை தஞ்சாவூரை சேர்ந்த நமது நண்பர் ஜோன்ஸ் அவர்களின் சித்தப்பா திரு.வின் பிரேல்ட் யாகப்பா அவர்களையே சாரும்
தஞ்சாவூரில் நமது பொருட்கள் எங்கு கிடைக்கும் தொலைபேசி மூலம் விசாரித்து விசாரித்து அவரது குழந்தைகளின் பிறந்த நாளுக்கு கடலை மிட்டாய்களை வாங்கி பள்ளிக்கு அனுப்பியதால் மூலம் எங்களுக்கு அறிமுகமானவர் .
அதன் பிறகு அவர் திருமணம் முடித்த கன்னியாகுமரி மாவட்டம் வள்ளியூர் பகுதி அவரது உறவினர்கள் வீட்டு விஷேசங்களுக்கு கடலை மிட்டாய்களை இவர் சார்பில் பரிசாக அளித்து அவர்கள் & எங்கள் இருவர் மனதிலும் இடம் பிடித்துள்ளார்
கடந்த வாரம் அவரது உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளை படமெடுத்து அனுப்பியிருந்தார் ,
அதனை தங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறோம்
தங்கள் வீட்டுக்கு வித்தியாசமாக ஏதும் செய்யவேண்டுமென்றால் எங்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்
இணையக்கடை முகவரி www.singamsweets.com
இனிப்புபிள்ளையார் :https://singamsweets.com/product/inippu-pillaiyar/
பருப்பு கூடு